இலங்கையில் இருந்து வெளியேறிய இலட்சக்கணக்கான மக்கள்! எதற்கு தெரியுமா?

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் (2022) இலங்கையில் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை 150 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்று பல நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றவர்களில் 60 வீதமானவர்கள் ஆண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்குச் செல்பவர்களில் பெரும்பாலோர் சிறப்புத் தகுதிகள் ஏதும் இல்லாதவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.