அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதில் சவால்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !

அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது பாரிய சவாலாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (17.01.2023) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பொருளாதாரம் சற்று மேம்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கடன் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

விரைவில் பதில் கிடைக்கும் என நம்புகிறோம். மேலும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்குவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

அதேநேரம் நாட்டில் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி விவசாயிகளுக்கு உரங்களை வழங்கி இந்தப் பிரச்சினையைத் தீர்த்துள்ளோம்.

இந்நிலையில் ஒரு கிலோ நெல்லின் விலையை 100 ரூபாயாக்க வேண்டும். இதற்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம்.

எனவே, எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.