இன்றைய ராசிபலன்31.09.2023

மேஷ ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பணிகளில் பொறுமை அவசியம். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரத்தில் பணியாளர்க ளால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக் காது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். ஷண்முகக் கடவுளை வழிபட சங்கடங்கள் நீங்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டு.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாகும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். இளைய சகோ தரர்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தெய்வப் பணி களில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர் களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எப்போதும் போல் இருக்கும். இன்று நீங்கள் துர்கையை வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற் சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் வீண் செலவுகளால் சஞ்சலம் ஏற்படும். சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செயல்களில் பதற்றம் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தரும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க் கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங் கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரி டும். சிலருக்கு கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் கனிவான அணுகு முறை அவசியம். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் மனக்குழப்பங்கள் நீங்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது அவசியம்.

துலா ராசி அன்பர்களே!

பிற்பகலுக்குமேல் மனதில் உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் சஞ்சலத்தை ஏற்படுத்தும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வழிபட முயற்சிகள் சாதகமாக முடியும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத் துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மன தில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தாய்வழி உறவி னர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கி டையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவை. ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் கூடுதலாகும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்குமுக்காட வைக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். அவர்களுடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் அவசியம். வாழ்க்கைத்துணைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் சில சிரமங்கள் ஏற்படும். மகான் ஷீர்டி சாய்பாபாவை வழிபட மன அமைதி பெறலாம்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியில் செல்வதை கூடுமானவரை தவிர்த்துவிடுவது நல்லது.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீன ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு சகோதரர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். மூன்றாவது நபர் களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கைத்துணை யின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். விநாயகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் மறைமுக ஆதாயம் ஏற்படும்.

சிவிலியன் உட்பட மூவரை விண்வெளிக்கு அனுப்பிய சீனா

சிவிலியன் ஒருவர் உட்பட மூவரை சீனா (30) இன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

ஷெங்ஸோ -16 பயணத்திட்டத்தின் மூலம், ஸெங்ஸோ விண்கலத்தில், சீனாவின் தியான்கோங் விண்வெளி நிலையத்தை நோக்கி இவர்கள் அனுப்பப்பட்டனர்.

சீனாவின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள ஜியூகுவான் செய்மதி ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.31 மணிக்கு இவர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

ஜிங் ஹெய்பெங் தலைமையிலான இக்குழுவில், பொறியியலாளர் ஸு யாங்ஸு, மற்றும் சீனாவின் முதல் சிவில் விண்வெளியாளராக பேராசிரியர் குய் ஹெய்சாவோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுவே முதல் தடவை

அதேவேளை சிவிலியன் ஒருவரை சீனா விண்வெளிக்கு அனுப்பியுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

இவர்களை விண்வெளிக்கு ஏவும் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் விண்வெளியாளர்கள் அனைவரும் சிறந்த நிலையில் உள்ளனர் எனவும், மேற்படி ஏவுதளத்தின் பணிப்பாளர் Nh லீபெங் கூறினார்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சீனாவின் 4 ஆவது பயணம் இதுவாகும். ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்ததாக சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய 3 ஆவது நாடு சீனா ஆகும்.

இதேவேளை 2030  இறுதிக்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் இடம்பெறும் மோசடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆகவே போலி வெளிநாட்டு முகவர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாகவும் விழிப்பாக செயற்படுமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

அதன்படி வெளிநாடு செல்வதாக இருந்தால் மட்டக்களப்பு பொது சந்தை கட்டிடத்திலுள்ள அரச வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை பொதுமக்கள் நாட வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட வர்த்தகர்

  யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் கடன் தொல்லையால்  குடும்பஸ்தர் ஒருவர்  தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவிண்டில் பகுதியில் நேற்று (29)  இந்த சம்பவம் இடம்பெற்றதாக  கூறப்படுகின்றது.  சம்பவத்தில் மரக்காலை நடத்தி வரும் ஒருவரே தனது வீட்டில் உயிரை மாய்துள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் தாக்குதல்

அதேசமயம் அவர் உயிரை மாய்த்த சமயத்தில் அவரைதேடி வீட்டிற்கு வெளியில் கடன் கொடுத்தவர்கள் சிலர் காத்து நின்றதாகவும், வர்த்தகர் உயிரை மாய்த்ததையறிந்து வீட்டிலிருந்து அழுகுரல்கள் கேட்டதையடுத்து  அவர்கள் நழுவிச் சென்றதாகவும்  கூறப்படுகின்றது.

அதேவேளை கடந்த சில நாட்களின் முன்னரும் கடன்கொடுத்தவர்கள் மரக்காலைக்கு சென்று தலைக்கவசத்தால் வர்த்தகரை தாக்கியதாக  அப்பகுதியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கடன் தொல்லையால் வர்த்தகர் ஏற்கெனவே ஒருமுறை தனது மரக்காலைக்குள் உயிரை மாய்க்க முயன்றபோது, மரக்காலையில் பணியாற்றியவர்கள் அவரை சமாதானப்படுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

 கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞரே  இவ்வாரு உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் இந்த  துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில்  வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த   இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார்.

மேலும் இளைஞர் உயிரிழந்த  சம்பவம் தொடர்பாக  கனடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நபர் ஒருவரை அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தேடப்படும் சந்தேக நபர் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நபர் ஒருவர் மீது டி-56 துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருப்பினும் மேற்படி புகைப்படத்திலுள்ள அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேக நபர் 33 வயதுடைய நபர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் இடது கை மணிக்கட்டில் இருந்து மேல் நோக்கி பறவையின் இறகு போன்ற கருப்பு நிறத்தில் பச்சை குத்தியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு – 071 859 1733, நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு குற்றப் பிரிவு – 071 85917335, நிலைய அதிகாரி விசாரணை பிரிவு 1 – 071 8596503 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்ட அதிகரிப்பு!

இன்று (30) நள்ளிரவு முதல்  அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா அமுலுக்கு வருகிறது.

இதன்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 22 லீட்டராகவும் ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும் மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும் கார்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் தெரிவித்தார்.

யாழில் வீதியை கடக்க முற்ப்பட்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

தெல்லிப்பழை கிளானையைச் சேர்ந்த சடையன் பாலச்சந்திரன் (வயது – 48) என்பவரே இதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லாகத்திலிருந்து தெல்லிப்பழையை நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தவர் துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எதிரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்தவரை சந்திப்பதற்காக வீதியைக் கடக்க முற்பட்டுள்ளார்.

வீதியின் மத்திய கோட்டுப் பகுதியில் வைத்து தெல்லிப்பழையிலிருந்து யாழ். நகர் நோக்கி வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேலும் அவர் மருத்துவமனையிலேயே நேற்றுமுன் தினம் மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனடாவில் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

 கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞரே  இவ்வாரு உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் இந்த  துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில்  வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த   இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார்.

மேலும் இளைஞர் உயிரிழந்த  சம்பவம் தொடர்பாக  கனடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வாகனம்

நாட்டில் 7 பேர் பயணம் செய்யும் வகையில் இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முச்சக்கர வண்டியில் பயணிக்க 150 ரூபா அளவு மாத்திரமே செலவாகும் என அதன் உரிமையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வாகனத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.