யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்திய சாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய Dr. சாரங்கன் அவர்கள் திடீர் சுகவீனமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் (25-05-2023) உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை முகநூலில் வட மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மாலையில் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித் துச் செல்லவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். இன்று விநாயகரை வழிபடுவதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது மிக அவசியம்.
மிதுன ராசி அன்பர்களே!
இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படு வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையக் கூடும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.
கடக ராசி அன்பர்களே!
சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தை யிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக் கும். ஆனால், பணியாளர் களால் சில பிரச்னைகள் ஏற்படும். மகாவிஷ்ணுவை வழிபட நல்லதொரு திருப்பம் ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.
சிம்ம ராசி அன்பர்களே!
சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் உதவியுடன் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி ராசி அன்பர்களே!
மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர் களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று சிவபெருமானை வழிபட மனதில் தெளிவு பிறக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.
துலா ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
தனுசு ராசி அன்பர்களே!
சாதிக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். கல்லூரிக் கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
மகர ராசி அன்பர்களே!
கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட இடையூறுகளைத் தவிர்த்துவிடலாம்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.
கும்பராசி அன்பர்களே!
கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னை கள் ஏற்படக்கூடும். இன்று அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.
மீன ராசி அன்பர்களே!
எடுத்த காரியம் அனுகூலமாகும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள் ளது. உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
பெரும்பாலான மக்களின் இன்றைய முக்கிய பிரச்சனையாக உடல் பருமன் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதியடைகிறார்கள்.
சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் பிரச்சனைகள் போன்ற உடல்நல பிரச்சனைகள் உடல் பருமனால் ஏற்படும்.
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் சாப்பிடும் உணவுகள் உடல் எடையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எடை இழப்பு திட்டத்தில் இருக்கும்போது என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். எதையாவது சாப்பிடுவது என்பது இப்போதெல்லாம் உடல்நலக் குறைபாடுகளுக்கு மிகவும் ஆபத்தானது.
அதிக கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள சில தின்பண்டங்களை சாப்பிடுவது இறுதியில் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
எனவே எடை இழப்புக்கு உதவும் சிற்றுண்டிகளை சாப்பிடலாம். அவை என்னென்ன ஸ்நாக்ஸ் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஹம்முஸுடன் வெட்டப்பட்ட வெள்ளரிகள்
வெள்ளரியில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. நீரேற்றம் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட அற்புதமான உணவான வெள்ளரி எடை இழப்புக்கான சிறந்த தேர்வாக அமைகின்றன. திருப்திகரமான மற்றும் சத்தான சிற்றுண்டிக்காக அவற்றை இரண்டு தேக்கரண்டி ஹம்மஸுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
வறுத்த கொண்டைக்கடலை
வறுத்த கொண்டைக்கடலை ஒரு மொறுமொறுப்பான மற்றும் நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டியாகும். இது மிளகு, சீரகம் மற்றும் பூண்டு தூள் போன்ற பல்வேறு மசாலாப் பொருட்களுடன் சேர்த்து தயாரிக்கலாம்.
அவை திருப்திகரமான நெருக்கடியை வழங்குகின்றன மற்றும் நல்ல அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்குகின்றன.
மிக்ஸ் நட்ஸ்
பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி அல்லது பிஸ்தா போன்ற நட்ஸ்கள் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதத்தில் நிறைந்துள்ளன. நட்ஸ்கள் கலோரி-அடர்த்தியாக இருப்பதால், பகுதி அளவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
முளைக்கட்டிய சாட் மசாலா
முளைக்கட்டிய பயிர் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான அருமையான மூலமாகும். முளைத்த பருப்பு (மூங் அல்லது மட்கி), நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, கொத்தமல்லி இலைகள் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து கலக்க வேண்டும்.
சாட் மசாலா மற்றும் ஒரு டம்ளர் புளி சட்னியை ஒரு சுவையான மற்றும் நிரப்பு சிற்றுண்டிக்கு சேர்க்க வேண்டும்.
எடமாம்
எடமாம் ஒரு இளம் சோயாபீன் மற்றும் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். அவற்றை ஆவியில் வேகவைத்து, சிறிது உப்பு தூவி, ஆரோக்கியமான மற்றும் நிறைவான சிற்றுண்டியாக அவற்றை அனுபவிக்கவும்.
மூங் டால் சில்லா
மூங் டால் சில்லா என்பது பாசிப்பருப்பால் செய்யப்பட்ட ஒரு சுவையான அப்பம். இது புரதத்தால் நிரம்பியுள்ளது மற்றும் நறுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் சீரகம், மஞ்சள் மற்றும் கொத்தமல்லி போன்ற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இவற்றை புதினா சட்னியுடன் பரிமாற வேண்டும். எனவே, அவற்றை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள். மேலும் உடல் எடை அதிகரிக்கும் என்ற பயமும் வேண்டாம்.
சுற்றுலா விசாவில் மலேசியா சென்று அங்கு பணியாற்றிய 44 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23 ஆம் திகதி இரவு மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொபேகன் பகுதியில் வசித்து வந்த மகலந்தானையைச் சேர்ந்த திருமணமான மற்றும் ஒரு பிள்ளையின் தாயான டொன் ரேணுகா நிலாந்தி பண்டார என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாஎல பகுதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குநர் மூலம் சுற்றுலா விசாவில் மலேசியா சென்றுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி யாரேனும் ஒரு பரீட்சார்த்தி அனுமதிப்பத்திரம் இல்லாமல், பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போனால் பாடசாலையின் அதிபரே அதற்கு பொறுக்கூற வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளி குடு அஞ்சு நாடு கடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு அஞ்சு , இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஆவணங்களும் பிரான்ஸ் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பொலிஸாரால் ஆவணங்கள் ஆராய்ந்த பின்னர் குடு அஞ்சுவை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டியலிடப்பட்ட குற்றங்கள்
குடு அஞ்சு இதுவரை செய்த குற்றங்கள், டுபாய், பிரான்சில் தங்கியிருந்து செய்த குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தையும் பிரான்ஸ் அரசுக்கு தெரிவிக்கவும் இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இலங்கை நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுகள் மற்றும் அஞ்சுவின் போதைப்பொருள் தொடர்பான வழக்கு அறிக்கைகள் உட்பட பிரான்சஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குடு அஞ்சு தொடர்பில் பிரான்ஸுடனான பேச்சுவார்த்தைக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, எதிர்வரும் ஒரு சில வாரங்களில் போதைப்பொருள் குடு அஞ்சுவை இலங்கைக்கு நாடு கடத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297.60 ரூபாவாக குறைந்துள்ளதுடன் விற்பனை விலை 310.95 ரூபாவாக உள்ளது.
மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 303.26 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி 362.66 ரூபாவாக இருந்தது.