மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரானாவுக்கு பலி!

தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இன்று ஏறாவூரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் நேற்று புதன்கிழமை 07 ஆம் திகதி தெரிவித்தார்.

திங்கட்கிழமை இடம்பெற்ற அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில்
மட்டக்களப்பு – 07
காத்தான்குடி – 03
களுவாஞ்சிகுடி – 01
ஓட்டமாவடி -07
வெல்லாவெளி – 04
ஆரையம்பதி -02
கோறளைப்பற்று மத்தி – 07
செங்கலடி – 13
ஏறாவூர் – 04
வெளிமாவட்டத்தார் – 01 பேர் உட்பட்ட 49 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.

Advertisement