யாழில் இடம்பெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம்!

மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானிக் கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்கள் – எரிபொருட்களின் விலைகளை உடனே குறை, விவசாயிகள் – மீனவர்கள் எதிர்கொள்ளும்நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்!, கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் வழங்கி இயல்பு வாழ்வுக்கு வழி செய்!, அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்! ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ். பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், விவசாய சம்மேளனங்கள், மீனவர் சங்கங்கள், இளைஞர் அமைப்புகள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், சமூக நலன்விரும்பிகள், கல்வியியலாளர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இதில் பங்குகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு இதன் ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வட பிராந்திய செயலாளரும், வலி. கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினருமான செல்வம் கதிர்காமநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.