அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை செயற்பாடுகள் மற்றும் சேர்.ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுதல் ஆகியவற்றினை வலியுறுத்தி ஜே.வி.பி.யினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை நகரில் குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

ஜே.வி.பி.யின் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் குறித்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இலவசக் கல்வி பெறும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு இடமளிக்ககூடாது என போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

மேலும் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறு அரசாங்கத்தை போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு உரிய முறையில் இடம்பெறவேண்டும். அவர்களின் தொழில்சார் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.