தமிழர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் கிழித்தெறிந்த இலங்கை இராணுவம்!

கருப்பு யூலையை நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆனால் அனைத்தும் இரவோடு இரவாக பொலிஸ், இராணுவம், புலனாய்வாளர்களால் முற்று முழுதாக கிழித்தெறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அத்தோடு ஜனநாயக நாட்டில் அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை நினைவு கூருவதற்கு ஸ்ரீலங்கா அரசு தடை போடுகின்றது என்றால் இங்கு ஜனநாயகம் எங்கு உள்ளது எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான இச் செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.