இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன!

இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நன்னொடையாக கிடைக்கவுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பசிகள் நாளை மறுதினம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று வரை 84 இலட்சத்து 39 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Advertisement

அவற்றுள் 66 இலட்சத்து 93 ஆயிரத்து 72 பேருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 17 இலட்சத்து 46 ஆயிரத்து 397 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதில் பெரும்பாலானோருக்கு அதாவது, 62 இலட்சத்து 65 ஆயிரத்து 371 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டுள்ளன.