இணையவழியில் சிக்கி சீரழிந்த மற்றுமொரு சிறுமி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினி மரணமும் இலங்கையை உலுக்கிவிட்டது.

இந்த நிலையில், தற்போது இணையவழி வகுப்பின் மூலம் வாழ்க்கையை தொலைத் சிறுமி ஒருவர் தொடர்பில் மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி, இணையவழி வகுப்பில் பழகிய இளைஞன் மூலம் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக , மொறட்டுவை பொலிசாருக்கு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலில் பல அதிர்ச்சித் தகவ்லகள் கிடைத்துள்ளது.

அதன்படி தெரியவருவது,

8 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயது சிறுமி, இணையவழி வகுப்பில் அதே வயதுடைய மாணவனுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்ததை முதற்கட்ட விசாரணையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின், குறித்த மாணவி அந்த மாணவனுடனான உறவை துண்டித்துவிட்டு, தனது தொலைபேசி இலக்கத்தை மற்றுமொரு 16 வயது நண்பரிடம் தனது விருப்பத்துடன் கொடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பானந்துறையிக் வசிக்கும் குறித்த நண்பர், சிறுமியை மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் உறவு கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, குறித்த சிறுமி அந்த நபருடனான தொடர்பினையும் நிறுத்திவிட்டு, ஜா-எலாவில் 22 வயது இளைஞருடன் தொலைபேசி உரையாடலை தொடர்ந்துள்ளார்.

இருவரும் தொலைபேசியில் தொடர்பை வளர்த்து மட்டுமல்லாமல், குறித்த இளைஞன் சிறுமியை கேகாலையிள் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று இரண்டு வாரங்கள் அங்கேயே தங்கியிருந்துள்ளார்..

அந்த நேரத்தில் தான் சிறுமியின் பெற்றோர் தனது மகள் காணாமல் போனது தொடர்பாக மொறட்டுவ பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடந்து, சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்கள், பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்தி, குறித்த சிறுமி இளைஞனுடன் வீட்டில் இருப்பதாக தகவல் அளித்துள்ளனர்.

அதன்படி, கேகாலை பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் மொறட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இணையவழி கற்றலுக்காக ஒருபக்கம் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்க, மற்றோரு பக்கம் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு தமது எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டு இருக்கின்றமை மிகவும் வேதனைக் குரியது.