வவுனியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா!

சிறைக் கைதிகள் 3 பேர் மற்றும் 12 சிறுவர்கள் உட்பட வவுனியா மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியா சிறைக் கைதிகள் 23 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களில் மூவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியாவில் இருந்து பெறப்பட்டிருந்த 116 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் மேலும் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநாட்டை மிரட்டும் மற்றுமொரு சரும நோய்!
Next articleசருமத்தில் உள்ள அழுக்கை போக்கும் காபி ஸ்க்ரப்!