வவுனியாவில் 13 வயது தமிழ்ச் சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது தம்பி!

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13வயது அக்காவை 12வயதுடைய தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த 13வயதுடைய சிறுமி வயிற்றுகுத்து காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் இதன் போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது குறித்த சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வைத்தியர்கள் வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிக்கை சமர்ப்பித்தமையினையடுத்து ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளில் தனது தம்பி தன்னை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக சிறுமியளித்த வாக்குமூலத்தின் பிரகாரம் 12வயதுடைய தம்பி ஒமந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.