ஒக்ஸிஜன் இயந்திரத்தை அகற்றி, குழப்பம் ஏற்படுத்தி, ஜன்னலை உடைத்து தப்பியோடிய கொரோனா நோயாளி மரணம்!

அனுராதபுரம், மெத்சிறி செவன கொவிட் தீவிர சிகிச்சை பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்தி, அங்கிருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அனுராதபுரம், ஜயசிரிபுர பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்றியமையினால் வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற இளைஞனுக்கு அறிகுறிகள் காணப்பட்டமையினால் மெதசிறி கொவிட் சிகிச்சை நிலையத்தின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அதிகாலை அவர் தனக்கு பொருத்தப்பட்டிருந்த ஒக்ஸிஜன் இயந்திரத்தை அகற்றிவிட்டு அருகில் இருந்த நோயாளிகள் மீது நீர் உற்றி குழப்பம் ஏற்படுத்தியுள்ளார். அத்துடன் தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தப்பி சென்றவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதி ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நபர் அருகில் உள்ள நோயாளிகள் ஆபத்தான நிலையில் இருப்பதனை பார்த்து மன ரீதியாக பாதிக்கப்பட்டமையினால் இவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.