போக்கு வரத்துசபையில் சாரதியாக கடமையாற்றி ஒருவருக்கு கொரோனா தொற்று….!

மட்டக்களப்பில் இலங்கை போக்கு வரத்துசபையில் சாரதியாக கடமையாற்றி ஒருவருக்கு கொரோனா தொற்று என நேற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சட்டத்தை மீறி மட்டக்களப்பு பொதுச் சந்தையில் மரக்கறி கொள்வனவு செய்ய சென்ற நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் அவரை பிடித்து கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பிய சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போவில் சாரதியான அம்பாரை கோமாரியைச் சேர்ந்த குறித்த நபர் மட்டக்களப்பில் தங்கியிருந்து கடமையாற்றி வருவதாகவும் அவருக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை வீட்டில் பொது சுகாதார பரிசோதகர்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.

குறித்த நபரை கரடியனாறு கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement