கொழும்பின் முக்கிய பகுதி உட்பட நாட்டின் பல பகுதிகள் முடங்க தீர்மானம்!

கொழும்பின் முக்கிய பகுதியான புறக்கோட்டையின் கெய்சர் வீதி முடங்கவுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை பத்து நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் இரவு வேளைகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே கெய்சர் வீதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

வர்த்தக நிலைய ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 31 நகரங்களில் இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.