வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் இருவருக்கு கோவிட் தொற்று: தற்காலிகமாக மூடப்பட்ட திணைக்களம்

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திணைக்களம் மூடப்பட்டுள்ளதுடன், பணியாளர்களை வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்குப் பணிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புகையிரத நிலையத்தின் முன்பாக அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் இருவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திணைக்களத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய பணியாளர்களை இரண்டு நாட்களிற்கு வீட்டில் இருந்து பணிபுரியப் பணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

எனவே பொதுமக்கள் தேவை நிமித்தம் திணைக்களத்திற்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.