யாழில் மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு….!

யாழ்ப்பாணம் – அராலி வசந்தபுரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயார் கோவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு 6 நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார்.

இதனையடுத்து மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் அவர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

அவரது சடலத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை உயிரிழந்த குடும்பப் பெண் கோவிட்-19 தடுப்பூசியின் முழுமையான அளவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் தகனம் செய்யப்படவுள்ளது.

Previous articleயாழில் கடற்படையினரின் வாகனம் மீது கல்வீச்சு…..!
Next articleபருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பற்ற எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்…!