பெற்ற மகன்களால் துரத்தப்பட்ட 80 வயது மூதாட்டி..!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பெற்ற மகன்களால் துரத்தப்பட்ட 80 வயது மூதாட்டி, தனது மகன்களுக்கு பத்திரபதிவு செய்து வைத்த 5 ஏக்கர் நிலத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

பாளேத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி, கணவர் மரணமடைந்த நிலையில், அவரது சொந்த உழைப்பில் விவசாய நிலம் வாங்கி, விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது பிள்ளைகளுக்கு பத்திரம் மூலமாக அவர்கள் பெயரில் பதிவு செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Previous articleகாதலன் இறந்த துக்கத்தில் ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவி தற்கொலை……!
Next articleயூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது….!