குளத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு…..!

நிக்கவெரட்டிய, கலபிட்டியகம குளத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் 59 வயதுடைய, கலபிட்டியகம பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்படி குளத்திற்கு நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நீரில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதுபற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார் , இதுதொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதமிழர் பகுதியில் இப்படி ஒரு அவலம்; பெண்ணொருவர் மீது கொடூர தாக்குதல்!
Next articleயாழ். மாவட்டத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மூவர் கைது….!