கோர விபத்தில் தனியாக கழன்று சென்ற நபரின் பாதம்….!அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகுதியில் 19வது மைல் கல் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதிய கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் பாதம் உடலில் இருந்து தனியாக கழன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான காரின் சாரதி தலைமன்னார் வைத்தியசாலையின் வைத்தியர் எனவும் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான வைத்தியர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Previous articleகாட்டு யானைக் குட்டியை துன்புறுத்திய சாரதி கைது….!
Next articleகோவிட் வைரஸ் முடிவு திகதி வெளியானது…..!