பொலிஸ் வாகனத்தை மோதி தப்பி சென்ற சொகுசு வாகனம்…!

கல்முனை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வீதி விபத்தில் சிக்கிய போக்குவரத்து பொலிசார் சொகுசு வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்ற போது மாவட்ட போக்குவரத்து பொலிஸார் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தனர். கல்முனை நோக்கி பயணித்த சொகுசு வாகனத்தை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது, குறித்த வாகனம் பொலிஸாருடன் மோதியதுடன், போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மீதும் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து வாகனத்தை கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிஸார் வாகனத்தை செலுத்தியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்முனை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ் நூலகத்திற்கு விஜயம் புரிந்த ரோசி சேனநாயக்க…..!
Next articleவவுனியாவில் ஓட்டம் எடுத்த மைத்திரி! தடுமாறிய மெய்பாதுகாவலர்கள்…..!