பசிலின் வீட்டை சுற்றிவளைத்த மக்கள்அரசாங்கத்திற்கு எதிராக நேற்று மக்கள் பாரிய போராட்டங்கள் முன்னெடுத்திருந்தனர். இதன்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன.

இந்நிலையில் பத்தரமுல்ல நெலும்மாவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்சவின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றிரவு சுற்றிவளைத்தனர்

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பசிலின் வீட்டை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் நள்ளிரவு தாண்டியும் தீவிரமாக நடைபெற்றது. இதன்போது பல முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமகால அரசாங்கத்தில் நிதியமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவின் பொறுப்பற்ற செயற்பாடே நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பசிலின் வீட்டை சுற்றிவளைத்த மக்கள்
Previous articleமிரிஹானவில்பேருந்திற்கு தீ வைத்த நபரை தேடும் பணியில் பொலிஸார்
Next articleஇனி வரும் ஆட்சியாளர்களுக்கும் இதே நிலைதான் – நாடாளுமன்றத்தில் நாமல் பகிரங்கம்