போராட்ட களத்தில் பொலிசாரால் இளைஞர்களின் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கிசூடு!ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் கேகாலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

போராட்ட களத்தில் பொலிசாரால் இளைஞர்களின் மீது மேற்கொள்ளபட்ட துப்பாக்கிசூடு!
Previous articleபாடசாலை வேன் கட்டணங்கள் அதிகரிப்பு !
Next articleஆர்பாட்டத்தில் பொலிசாரால் ஏற்படுத்தபட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!