அரசாங்கத்திற்கு எதிராக மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொம்பே பகுதியில் இருந்து பேரணியில் கலந்து கொள்ள வருகைத் தந்த 65 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மகனுடன் பேரணியில் கலந்து கொள்வதற்காக வருகைத் தந்துள்ளார்.

காவடி நடனம் ஆடுவதற்காக குறித்த நபர் சென்ற வேளை இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Previous articleயாழ். சென்ற போது கண் கலங்கிய அமெரிக்க தூதுவர்
Next articleகாலம் கடந்து விட்டது கையை மீறிய இலங்கை கோட்டாபயவிடமே இறுதி முடிவு