சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

2021ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனுமதி மற்றும் பரீட்சை அட்டவணைகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

மேலும், அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் முதலாம் திகதி வரை சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்ய மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு 0112 784 208, 0112 784 537, 0113 188 350 மற்றும் 0113 140 314 அல்லது 1911 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி பலி
Next articleயாழ். – கொடிகாமம் பகுதியில் மதுபான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் (Photos)