கிளிநொச்சியில் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு விசேட எரிபொருள் விநியோகம்

நாளை ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு கடமையில் ஈடுப்படவுள்ளவர்களுக்கும், பரீட்சாத்தியின் பெற்றோர்களுக்கும் விசேடமாக எரிபொருள் விநியோகம் இன்றும் நாளையும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

பரீட்சை கடமைகளுக்கான எரிபொருள் விநியோகித்தல் எதிர்வரும் 23 ம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான கடமைகளில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம், கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கம், கிளிநொச்சி பூநகரி பலநோக்கு கூட்டுறவு சங்கம், பூநகரி, சாந்தரூபன் எரிபொருள் நிலையம், இயக்கச்சி, பளை, ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகிப்பட்டு வருகிறது.

எனவே, குறிப்பிடப்பட்ட கடமைகளுக்கான எரிபொருளினை பெற்றுக்கொள்ள தங்களது சிபாரிசுடன் உத்தியோகத்தர்கள் பட்டியலை வாகன விபரத்துடன் உடனடியாக அனுப்பி வைக்குமாறு கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர்களை மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டையினை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் 1,500 பேர் பொலிஸாரால் கைது!
Next articleமன்னாரில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!