தாய் இறந்ததை மறைத்து மகளை தேர்வுக்கு அனுப்பிய தந்தை : பின் நடந்த சோகம்

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் தாய் இறந்ததை மறைத்து தனது மகள்களை நபர் ஒருவர், பொதுத்தேர்வு எழுத அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

தென்காசியின் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி முத்துமாரி ஆடு மேய்க்கும் வேலையை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்துமாரி ஆடுமேய்க்க சென்றபோது, கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதனைத் தொடர்ந்து, தனது மகள்கள் வானீஸ்வரி மற்றும் கலாராணி ஆகியோரிடம் தாய் முத்துமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பெரியசாமி கூறியுள்ளார். தங்கள் தாய் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் வானீஸ்வரி – கலாராணி இருவரும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்றனர்.

ஆனால் அவர்கள் தேர்வு முடிந்து வீடு திரும்பியபோது, தாய் இறந்தது தெரிய வந்துள்ளது. இதனால் மாணவிகள் கதறி அழுதனர். அதன் பின்னர் தேர்வெழுத வேண்டும் என்பதற்காக தங்கள் தந்தை அவ்வாறு கூறி அனுப்பி வைத்ததை மாணவிகள் அறிந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை கலங்க வைத்தது.

Previous articleயாழில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனின் மனைவி கைது!
Next articleவவுனியாவில் 14 வயது சிறுமியை சீரழித்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை