மனைவியின் தம்பியையும் மனைவியையும் அடித்துக் கொன்ற கணவன்

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராற்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மனைவி மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் இதன்போது, கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி 32 வயதுடைய நபர் மற்றும் அவரது 25 வயது சகோதரி ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தில் சந்தேக நபரான கணவன், காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Next articleபிள்ளையின் பசியை போக்கிய தாய்மீது தாக்குதல்!