யாழில் மீட்கப்பட்ட கண்டியில் காணாமல் போன 14 வயது சிறுமி!

கண்டியில் மாயமான 14வயது சிறுமி யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ம் திகதி இராசலிங்கம் எனபவரின் 14 வயது மகள் பிரியதர்சினி காணாமல் போன நிலையில் பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுமி கடந்த 11ம் திகதி யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

சிறுமி காணாமல் போனதை யாழ். வர்த்தகர் ஒருவர் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததையடுத்து சிறுமி பஸ் தரிப்பிடத்தில் இருப்பதை அவதாணித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வர்த்தகர் சிறுமி குறித்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதையடுத்து யாழ். பொலிஸார் சிறுமியை மீட்டு கலஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கலஹா பொலிஸார் சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்ததையடுத்து கண்டி வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக சிறுமியை அனுமதித்துள்ளனர்.

அத்துடன் நாளை, நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்தசிறுமி யாழ்ப்பாணத்திலுள்ள தனது நண்பியைத் தேடிச் சென்றதாகவும், செல்லும் வழியில் தனது அலைபேசி செயலிழந்ததால் நண்பியுடன் தொடர்புகொள்ள முடியாமல், பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு குளிபானம் வழங்கிய இராணுவத்தினர்!
Next articleயாழிற்கு பெருமை சேர்த்து தந்த சிறுவர்கள்!