குழந்தையை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தப்பிச்சென்ற தாய்!

மாத்தறை – கந்தஹேன, அல்கிரிய, தெலிஜ்ஜவில பகுதியில் விஷத்தால் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

ஆறு மாத வீரதுங்க ஆராச்சிகே பசிது பிரபாத் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக மாலிம்படை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்த ஒன்பது மாத மற்றும் மூன்று வயது குழந்தைகள் அழுது கொண்டிருந்த சத்தம் கேட்டு அயல்வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த ஒன்பது மாத குழந்தை முச்சக்கரவண்டியில் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

22 வயதுடைய தாய் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என தெரியவரும் நிலையில், குழந்தைக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தாய் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், தனது மூத்த குழந்தை மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளதாகவும், தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கிடையாது எனவும் அந்த பெண் எழுதி வைத்திருந்த கடிதமொன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மாலிம்படை பொலிஸாரை எமது செய்திப் பிரிவு தொடர்பு கொண்ட போது சம்பவம் நடந்துள்ளதை உறுதிப்படுத்தியிருந்தனர். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleஇறுதி யுத்தத்தில் காணமல் ஆக்கப்பட்டோரின் ஆட்கொணர்வு மனுவுக்கான தீர்ப்பு ஜுலை முதலாம் திகதி!
Next articleபோலியான சமூக வளைத்தள கணக்குகள் வைத்திருப்போருக்கு அபராதம் : வெளியான அறிவிப்பு!