தொழில் நஷ்டத்தால் பெற்ற மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழில் வளம் பெற நீங்க மந்திரவாதி ஒருவரின் பேச்சைக்கேட்டு தந்தை ஒருவர் பெற்ற மகளை நரபலி கொடுக்க முயன்றுள்ளதையடுத்து மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சிறுமி.

இச்சம்பவமானது நேற்றையதின்ம ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வாழும் வேணுகோபால் என்பவர் டோசர் இயந்திரம் வேலை செய்து வந்துள்ளார்.

இவரது மகளான புணர்விகா(வயது3) எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அந்நபருக்கு தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதால் தொழில் வளம் பெற மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு தாயும் தந்தையும் பெற்ற மகளை வாயில் குங்குமத்தை தினித்து நரபலி கொடுக்க முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலரியதில் அயலவர்கள் வந்து பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுமியை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Previous articleயாழில் திடீர் சுற்றிவளைப்பில் 05 பேர் கைது : வெளியான காரணம்!
Next articleதிருகோணமலையில் உள்ள காட்டுப்பகுதியில் காணாமல் போன இளைஞர் : தேடும் பணியில் இறங்கிய இராணுவத்தினர்!