இன்று நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல்!

40,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

அந்த கப்பல் நேற்றையதினம் நாட்டை வந்தடையவிருந்த போதும், ஒருநாள் தாமதமாகியே பிரவேசிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே பெட்ரோல் விநியோகம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது எரிபொருள் கையிருப்பு குறைவடைந்துள்ள பின்னணியில் அதற்காக மக்கள் வாகனங்களுடன் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

Previous articleகடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 35 பேர் கைது!
Next articleவவுனியாவில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!