கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 11 வயது சிறுவன் : வெளியான காரணம்!

கிணறு ஒன்றில் இருந்து 11 வயது சிறுவனின் சடலம் ஒன்று நேற்று (24) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் அவர் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்தே சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (23) இரவு முதல் சிறுவன் வீட்டில் இல்லாததால், பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleமட்டக்களப்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பநிலை!
Next articleயாழில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் கைதானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!