இரண்டு குழந்தைகளுடன் வாவியில் குதித்த தாய் : மகள் உயிரிழப்பு!

எம்பிலிப்பிட்டியவில் உள்ள சந்திரிகா வாவில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் ஒருவர் குதித்துள்ளார்.

குறித்த தாய்க்கு (32) வயது என தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் தாய் மற்றும் மகன் (11 வயது), மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் 05 வயது மகள் உயிரிழந்துள்ளார்.

தாய் இவ்வாறு செய்தமைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. இச் சம்பவம் தொடர்பிலாள மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்டு ஐந்து வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் திடீரென சேவையில் இருந்து விலகிய தனியார் பேருந்து சாரதிகள் !
Next articleயாழில் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கை!