உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு!

2021ஆம் ஆண்டுக்கான உயிர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பான அவிறிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அளவில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையை ஒரு மாத காலத்திற்கு பிற்போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்

நடைமுறை பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை ஒரு மாத காலத்திற்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராகும் காலத்தை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமகிந்தவின் உடல்நிலை தொடர்பில் அவரின் மூத்த புதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஎரிபொருள் நிலையத்தில் இளைஞனை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி : வேளியான வீடியோ ஆதாரம்!