தாயை உளக்கையால் தாக்கி கொலை செய்த மகள்!

பெற்ற தாயை குடும்பத் தகராறு காரணமாக பெற்ற மகள் உளக்கையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் கொழும்பு – பொரளை சிங்கபுர தொடர்மாடி வீடமைப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் அப்பகுதியையுடைய 65 வயதான பெண்மணி என தெரியவந்துள்ளது.

குடும்பத்தில் இடம்பெற்ற தகராறின் காரணமாக தனது தாயை அடித்துக்கொன்றதாக மகள் கூறிய வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் கொலை செய்த பெண்ணை கைது செய்தததுடன் தாயாரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் வீட்டாரை கத்திமுணையில் மிரட்டி திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட குழு கைது!
Next articleமகனின் பாதுகாப்பிற்காக இலங்கை வரும் கோட்டாபய : பரபரப்பாகும் தென்னிலங்கை!