பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கொடூரம்!

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிலளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று குஜராத்தின் சபர்கந்தா உள்ள கம்போய் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் விவசாயி ஒருவர் தனது நிலத்தின் வழியாக சென்றுள்ளார் இதன்போது அவருக்கு குழந்தையின் அழுகுறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து சென்று பார்த்தபோது மண்ணுக்கு அடியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இந்நிலையில் அச்சம் அடைந்த அவர் அருகில் உள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் அங்கு வந்த ஊழியர்கள் அந்த இடத்தை தோண்டியதில் பிறந்து சில மணிநேரங்கள் ஆன பெண் குழந்தை புதைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

குழந்தையை மீட்ட ஊழியர்கள் எம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleயாழில் நாயை கேடாரியால் வெட்டிய இளைஞர்கள் : பொலிஸார் வலைவீச்சு!
Next articleவவுனியாவில் வாய்த்தர்க்கத்தால் இடம்பெற்ற பயங்கரம் : காதை கடித்து துப்பிய இளைஞர்!