மன்னாரில் லஞ்சம் வாங்கியதாக பெண் கொடுத்த பொய் குற்றச்சாட்டில் கிராமசேவகர் கைது : அப்பெண்ணின் வீட்டை அடித்து நொருக்கிய பொதுமக்கள்!

கிரம சேவகர் ஒருவர் நிவாரணம் வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் . இது பொய் குற்றச்சாட்டு என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று தலைமன்னார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிராம சேவகரை வேண்டுமென்றே ஒரு குடும்பம் அவர் மீது பொய்குற்றச்சாட்டு வழங்கியுள்ளதாகவும்.

அக்குடும்பம் பல சந்தர்ப்பங்களில் அதகளவிலான மோசடி வேலைகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிராம சேவகர் நேற்று கர்ப்பவதி பெண்ணிடம் 10 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அப்பெண் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து பொதுமக்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டவேளையில் இந்த கைது நடவடிக்கை திட்டமிட்டு நடந்திருக்கின்றது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பெண் மற்றும் அவரது குடும்பம் பொலிஸாரின் உதவியுடன் போதைப் பொருள் வைத்து லஞ்சம் வாங்குவது, மற்றும் லீசிங் நிறுவன ஊழியர்கள் திருடியதாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

மேலும் குறித்த சம்பவத்திற்கு பிரதான காரணமாக உள்ளது ஒரு பெண் எனவும்

மக்கள் கூறும் நிலையில் குறித்த பெண்ணின் வீட்டினை பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளதுடன், பொய்யான குற்றச்சாட்டில் கைதான கிராமசேவகரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் கூறியுள்ளனர்.