வவுனியாவில் அதிகாலை இடம்பெற்ற பயங்கர விபத்து! இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வவுனியாவில் ஏ9 வீதியில் பயணித்த லொறியுடன் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21-08-2022) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதுடைய ஆனந்தகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த லொறியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான முக்கிய தகவல்!
Next articleமுட்டையின் விலை நிர்ணயம் ஒரு ஏமாத்து வேலை! : அதிக விலைக்கு விற்கப்படும் முட்டை!