தாயை காப்பாற்ற சென்ற 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம்!

தமிழகத்தில் தாயை காப்பாற்ற முயன்ற 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள தெற்கு குப்பனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி அர்ச்சனா. ஊமைத் தம்பதிக்கு கார்த்திக் ராஜா (5), சுபாஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அர்ச்சனா சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வீட்டுச் சுவரின் அருகில் இருந்த சிறு ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று இருந்தது. இதைப் பார்த்த சிறுவன், தன் தாயைக் கடிக்காமல் இருக்க பாம்பை விரட்ட முயல்கிறான். ஆனால் நல்ல பாம்பு அச்சிருவனைக் கடித்தது.

இதில் அச்சிறுவன் கார்த்திக் ராஜா மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு கடம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கடம்பூர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு கடித்த தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleயாழ் பொதுமக்களிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : மேயர் மணிவண்ணன் வெளியிட்ட முக்கிய தகவல்!
Next articleபேருந்தில் பெண்களை முறைத்து பார்த்தால் கைது-புதிய சட்டம் அறிமுகம்!