பதுளையில் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர் : வெளியான காரணம்!

ஒருவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (30-08-2022) காலை பதுளை-தியானவெல பிரதேசத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த நபர் இன்று காலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குறித்த நபரின் விபரங்களை அறிந்து கொள்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவிநாயகர் சதுர்த்தி வழிபாட்டை இப்படி செய்யுங்கள்… வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தடைகளே வராது!
Next articleதலைதெறிக்க ஓடிய மணமகனை துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணமகள்!