இலங்கையில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பலி!

இலங்கையில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 2 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நேற்று (03-09-2022) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

மேலும், முச்சக்கரவண்டி சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleகாத்தான்குடியில் 15 வயது மகளை சீரழித்த தந்தை : அதிர்ச்சியில் ஊர்மக்கள்!
Next articleமீண்டும் அதிகரிக்கிறது எரிபொருள் நிலையங்களில் வரிசை !