செல்பி மோகத்தால் பறிபோன உயிர்!

ஹல்துமுல்ல, சன்வெலி தோட்ட பகுதியில் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குர்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் அருவியை பார்வையிட சென்ற போது அங்கு படம் எடுக்க முற்பட்ட போது கால் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளார்.
இந்தநிலையில், அவர் விழுந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் கீழ் நீர்வீழ்ச்சியில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleதிருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நிலை!
Next articleமழைவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 14 வயது பாடசாலை மாணடவன்!