வவுனியாவில் இடம்பெற்ற வோகனச்சோதனையில் சிக்கிய பொருட்கள்!

இன்று (03-10-2022) வவுனியா – ஈரட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் ஏற்றேரியகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (3.10) மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வத்தளை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ஹெண்டர் வாகனத்தை எரட்ட பிரதேசத்தில் வைத்து பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வாகனத்தில் இருந்து 3800 கிலோ மஞ்சள் மற்றும் 250 மில்லிலிட்டர் விவசாய கிருமிநாசினி மருந்து 519 போத்தல்களை எரட்ட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமான பொருட்களை ஏற்றிச் சென்ற நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் இடம்பெற்ற விபத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் பலி!
Next articleஇலங்கையில் எதிர்வரும் இரு நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல் !