பொலிஸாரின் மூர்க்கத் தனத்தால் குழந்தை வைத்தியசாலையில்!

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களை அமைதியான முறையில் நினைவு கூறுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்த போது, ​​பிள்ளைகளுடன் சென்றவர்களை பொலிஸார் இழுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை நேற்று (09) லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் குழந்தைக்கு காயம் ஏதும் இல்லை எனவும், சிகிச்சை முடிந்து குழந்தை நலமுடன் இருப்பதாகவும், வீட்டிற்கு கொண்டு செல்லலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், போலீசார் இழுத்துச் சென்றபோது குழந்தையின் முதுகில் அடிபட்டு நீல நிறமாக மாறியதாக குழந்தையின் தாய் தெரிவித்தார். இதன் காரணமாக 24 மணி நேரமும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.

எவ்வாறாயினும், “எனது குழந்தைக்கு நடந்தது இலங்கையில் வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது.

எனவே பொலிஸாரின் இந்த மோசமான நடவடிக்கைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக குழந்தையின் தாய் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.