மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

4 நாட்களுக்குப் பின்னர் இன்று (03-11-2022) ஹட்டனில் உள்ள Sibetco எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் எரிபொருள் இறக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விடுவிக்கப்பட்டதையடுத்து, முச்சக்கர வண்டிகள் உட்பட பெருமளவிலான வாகனங்கள் எரிபொருளைப் பெறுவதற்காக மீண்டும் வரிசையில் நின்றன.

பெட்ரோல் விலை குறைகிறது என்ற செய்தியில், பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் பெட்ரோலுக்கு முன்பதிவு செய்யாததால் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், மக்கள் பரிதவிப்பு அடைந்தனர்.இதையடுத்து, இன்று பெட்ரோல் வினியோகம் செய்வதை அறிந்த பொதுமக்கள், பெட்ரோல் பங்க் முன் திரண்டனர்.

Previous articleயாழில் பரிதாபமாக உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய் : வெளியான காரணம்!
Next articleதமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்க உள்ள இலங்கை பெண்ணான ஜனனி!