300 இற்கும் அதிகமான இலங்கையர்களை நடுக்கடலில் தவிக்கவிட்டு மாலுமி தப்பியோட்டம்!

இலங்கையில் இருந்து கனடாவுக்கு சட்டவிரோதமான முறையில் பயணம் செய்ததாகக் கூறப்படும் 306 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் சேதமடைந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 306 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கப்பலை தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில் கப்பலின் கேப்டன் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கப்பலில் சிக்கித் தவிக்கும் மக்கள் தமது நிலைமை தொடர்பில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு உதவி கோரி வரும் நிலையில், கப்பலை மீட்கும் நடவடிக்கையில் சமூகத்தைச் சேர்ந்த சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக கனடாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Previous articleநாளை முதல் யாழ்.புதிய பேருந்து நிலையத்திலிருந்து நீண்டதுார தனியார் பேருந்து சேவைகள் நாளை ஆரம்பம்..!
Next articleகண் பார்வையிழந்த நிலையிலும் தேசிய ரீதியில் யாழ் மாணவன் சாதனை!