காட்டு யானையின் தாக்கியதில் வனவிலங்கு அதிகாரி ஒருவர் பரிதாபமாக பலி!

காட்டு யானை தாக்கி வனவிலங்கு அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் உடவளை யானைகள் சரணாலயத்தில் கடமையாற்றிய வனஜீவராசிகள் அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இன்று (07-11-2022) காலை காட்டு யானைகளுக்கு உணவளிக்கச் சென்ற வனவிலங்கு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டார்.

காயமடைந்த அதிகாரி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரி பானடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகண் பார்வையிழந்த நிலையிலும் தேசிய ரீதியில் யாழ் மாணவன் சாதனை!
Next articleகடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு!