கண்டியில் மாயமான தமிழ்ச் சிறுமி; கலக்கத்தில் பெற்றோர்!

கண்டியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி கடந்த மாதம் 30 ஆம் திகதி இரவு 11.00 மணிக்குப் பின்னர் காணாமல் போயுள்ளார்.

பெற்றோருக்கு ஒரே பிள்ளையான 15 வயது சிறுமியே வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். காணாமல் போன சிறுமி கண்டி புஸ்சலவை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புஸ்ஸலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், காணாமற்போன சிறுமியை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

Previous articleயாழ்.கச்சோி – நல்லுார் வீதியில் சுமார் 200 வருடங்கள் பழமையான மரம் அடியோடு சாய்ந்தது..!
Next articleயாழில் பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்!