எரிவாயு விலை குறைப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புதிய விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 12.5 கிலோ லீற்றர் சமையல் எரிவாயுவின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ லிட்டர் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.4409 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோ லீற்றர் சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 5 கிலோ லிட்டர் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.1770 என குறிப்பிடப்பட்டுள்ளது.

2.3 கிலோ லீற்றர் சமையல் எரிவாயுவின் விலை 38 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleமுட்டை விலை குறைவடையுமா! வெளியான அறிவிப்பு
Next articleயாழில் காதலித்து கைவிட்ட யுவதியை பழிவாங்க அவரை பற்றி சுவரொட்டி ஒட்டி பழிவாங்கிய இளைஞன் !